ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறியமைக்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் டிரென்ட் போல்ற் (Trent Boult) மற்றும் பங்களாதேஸ் வீரர் மஹ்மத்துல்லா ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அபராதம் விதித்துள்ளது.
நேற்று முன்தினம் நனிக்கிழமை நடைபெற்ற பங்களாதேஸ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பங்களாதேஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தினை வென்றிருந்தது.
இந்தப் போட்டியின்போது டிரென்ட் போல்ற் பந்துவீசும்போது, ஆபாசமான வார்த்தைகளை அவர் பேசியமை நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதத் தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பங்களாதேஸ் வீரர் மஹ்மத்துல்லா, ஆட்டமிழந்து திரும்பியபோது எல்லைக் கோட்டை, தனது கிரிக்கெட் மட்டையால் அடித்து விட்டுச் சென்றமைக்காக சம்பளத்திலிருந்து 10 சதவீதத் தொகையை அபராதமாக செலுத்துமாறும் ஐசிசி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் வெளியிட்டள்ள ஐசிசி இரு வீரர்களுக்கும் தலா டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.