ஏமன் அரசும் , ஹவுத்தி போராளிகளும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐ. நா. தெரிவித்துள்ளது. ஏமனில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகின்ற நிலையில் பலமுறை போர் நிறுத்த ஒப்பத்தந்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டு அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஒப்பு கொண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹோடேடாஹ் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உணவு மற்றும் மருத்துவ வசதி தேவைபடும் மக்களுக்கு வேண்டிய உதவிகள் சேரும் என நம்புகின்றோம் எனவும் போர் நிறுத்தம் படிபடியாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஏமனில் அரச படையினருக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அரசுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன.
இப்போரில் இதுவரை 5,000 குழந்தைகள் உள்ளடங்களாக 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.