பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இரசாயன சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளினூடாக தப்பிக்க முடியாமல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ள நிலையில் , இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன சேமிப்பு கிடங்கில் உள்ள எரிவாயு சிலிண்டரில் தீ பற்றி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டும் டாக்காவில் இதேபோன்று இரசாயன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.