ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை அண்மித்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம் ஒன்றை இந்திய போர் விமானங்கள் இன்று அதிகாலை குண்டு வீசி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை அழிக்க சுமார் ஆயிரம் கிலோ நிறையுடைய வெடி குண்டுகளை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் -2000 ரக 12 விமானங்கள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
காஸ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு 40 பாதுகாப்புபடையினர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ள பாகிஸ்தான் உரிய பதில் நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.