காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரி, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர்.
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களுடனான ஆவணப்படமொன்றை சென்னையில் வெளியிட்ட சமூக ஆர்வலரான முகிலனை அன்றுமுதல் காணவில்லை.
இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் முகிலன் காணாமல் போனது தொடர்பான உண்மை அறியும் குழு அற்ககையினையும் சமர்ப்பித்துள்ளது
அத்துடன் முகிலன் என்ன ஆனார் என்பதைக் கண்டுபிடிக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டதாக, உண்மை அறியும் குழுவிடம் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், முகிலன் காணாமல் போனது தொடர்பாக இன்று ; சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிரேஸ்ட கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் உண்மை அறியும் குழுவினர் சேகரித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.