மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்சநீதிமன்றில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து தாக்கல் செய்ய்யப்பட்டிருந்த மனு 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றில் அவர் மறுஆய்வுமனு தாக்கல் செய்திருந்தார்.
புதிய ஆதாரங்கள் இருப்பதால் காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக மவுண்ட்பேட்டன் மகள் எழுதியது உள்பட 2 புத்தகங்களையும் கொடுத்திருந்தார்.
இந்த மனுவையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்ததில் எந்த அடிப்படை ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.