சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிராக அரச படையினர் மேற்கொண்ட பலத்த தாக்குதல் காரணமாக பலர் பாலைவனப்பகுதிகளை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல்-சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள சில பண்ணை நிலங்களை ஐ.எஸ். ஆமைப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில் அவர்களை அங்கிருந்’து வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.
அந்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது அமெரிக்கா தலமையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.