ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி தலையீடு செய்வதாகவும் இதனால், எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புவது தற்போது சவால் மிக்கதாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அன்று முதல் எமது நாட்டில் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது. ஆனால், இன்று மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்ததொரு எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக மாறியுள்ளது.
தற்செயலாக இடம்பெறும் சில தவறுகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக சமூகத்தினுள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், சிறந்ததோர் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களால் ஆற்றப்படும் பணிகள் அளப்பரியன.
மாணவர்களுக்கு வீடுகளை போன்றே பாடசாலைகளிலும் சிறந்த வழிகாட்டலும் பாசமும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரிக்கின்றது’எனத் தெரிவித்தார்.