Home இலங்கைஎல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…

by admin


நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More