128
பிரேசிலின் தலைநகரான சாவ் பாலோ நகரின் சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் அரசாங்கப் பாடசாலையில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் , 5 மாணவர்கள் உள்பட 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
(உள்ளூர் நேரப்படி) இன்று காலை இந்தப் பாடசாலையில் வகுப்புகள் ஆரம்பித்தவுடன் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த தகவலை சாவ் பாலோ மாநில ஆளுநர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த பாடசாலைய்க்கு காவற்துறையினரும், நோயாளர் காவுவண்டிகளில் மருத்துவர்களும் அனுப்பி வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டதாகவும் பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Spread the love