நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு மேற்பொண்ட அவுஸ்திரேலிய பிரஜையை எதிர்வரும் ஏப்ரல் 5-ம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலியரான 28 வயதான பிரென்டன் டாரன்ட் என்பர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்போது பிரென்டன் டாரன்ட பிணை எதுவும் கோராததையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை அவரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்தநிலையில் பிரென்டன் டாரன்ட் மீது ஏனைய குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த மசூதி தாக்குதலில் காயமடைந்த 4 வயது குழந்தை உள்பட 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.