சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குக்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமத நீதியரசர் நளின் பெரேரா. சிசிரடி ஆப்ரு ஆகிய நீதிபதிகளின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்த போது சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக கடமையாற்றிய விஜித் மலல்கொட முன்னிலையில் சுங்க வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விஜித் மலல்கொடவை அதிருப்திப்படுத்தும் வகையில் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தமைக்கு எதிராகவே சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இவ்வாறு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.