140
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று போட்டியில் முதல்தர வீரரான ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டுடன் போட்டியிட்ட நிலையில் 6 முறை சம்பியன்’ கிண்ணத்தினை வென்றுள்ள ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் தோல்வி கண்டு வெளியேறியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் இந்த காலப்பகுதியில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் ஜோகோவிச் தோல்வியடைந்துள்ளமை இது 2-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love