Home இலங்கைகூட்டமைப்பின் முடிவு பிரதமர் -ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும்

கூட்டமைப்பின் முடிவு பிரதமர் -ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும்

by admin

வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்வுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது நாளை செவ்வாய்க்கிழமை பிரதமருடனும் நாளை மறுதினம் புதன்கிழமை ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து வினவிய போதே மாவை.சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More