இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளே அழிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
களனி – சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் திண்ம நிலையில் காணப்படும் கொகைன் போதைப்பொருள் இரசாயனம் சேர்க்கப்பட்டு, அவை திரவமாக்கப்பட்டு அவை கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை புத்தளத்திலுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அழிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்சி எக்கோ சைக்கிள் நிறுவனத்தினால் இந்த கொகைன் போதைப்பொருள் அழிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிக்கப்பட்ட கொகைன் போதைப்பொருளின் பெறுமதி 10,935 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தது.