குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Portrait an unknown male doctor holding a stethoscope behind
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் சேவையாற்றுவதற்கு நிரந்தர மருத்துவர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது-:
ஆண்டுதோறும் குறைந்த மருத்துவர்களே வடக்குக்கு நியமிக்க ப்படுகின்றனர். அவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர். நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையில் சில மருத்துவமனைகள் இயங்குகின்றன.
அந்தவகையில் நெடுந்தீவில் சேவையாற்றுவதற்கு மருத்துவர்கள் முன்வராத நிலையில் அங்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க முடியாதிருந்த நிலையில் தற்போது அங்கு ஒரு நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்ப ட்டது.
நெடுந்தீவில் நிரந்த மருத்துவர் நியமிக்கப்படாது இருந்தபோது, ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

