152
டுபாயில் வைத்து பாதாளக்குழுத் தலைவரான மாக்கந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டவர்களுள் மற்றுமொருவரை குற்றவியல் திணைக்கள விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு, கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாலிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான மொஹமட் நசீம் மொஹமட் பைஸர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கெதிராக கொலைச் சம்பவமொன்று தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
Spread the love