Home இலங்கைகோத்தபாயவைக் கையாள, சரத்பொன்சேகாவிற்கு பதவி?

கோத்தபாயவைக் கையாள, சரத்பொன்சேகாவிற்கு பதவி?

by admin


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களின் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளன

உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு என்ற வகையில், கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் புதிய அமைச்சரவை நியமனத்தின் போது சரத்பொன்சேகாவுக்கு அமைச்சுப்பொறுப்பு எதனையும் வழங்க  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கவில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More