168
பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் லூட்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய குறித்த நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கைதானவர்கள் பெட்போர்டசியார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் விசாரணைகளின் பின் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love