230
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவினால் அப்பகுதியில் பற் தீ அருகிலுள்ள தொழிற்சாலைக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து கடும் முயற்சியின் பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த வட்டாரத்தில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love