அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி அறிவித்தலினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துமுள்ளநிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தொடர்ந்து காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி நேற்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது