205
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதனையடுத்து இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சகல வீடுகள், வாகனங்களிலும் வெள்ளைக் கொடியைப் பறக்க விடுமாறும், உள்நாட்டு அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான சுற்றுநிரூபமானது அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love