குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட கொரியா அடுத்த வருடத்தின் இறுதியில் சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அந்நாட்டிலிருந்து தென் கொரியாவிற்கு புலம் பெயர்ந்த சிரேஸ்ட தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவிற்கு புலம்பெயர்ந்ததன் பின்னர் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள குறித்த அதிகாரி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி மாநாட்டில், 2017 ஆண்டின் இறுதிக்குள் அணு ஆயுத தயாரிப்புக்களை முடிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டிரில்லியன் கணக்கான டொலர் பொருளாதார உதவி மற்றும் ஊக்க தொகை வழங்கும் நடவடிக்கைகள், கிம் ஜாங் உன்னின் அந்த லட்சியத்தை தகர்க்க எந்த வகையிலும் உதவாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.