குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரச வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது நாளாகவும் விமல் வீரவன்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் விசாரணை நடத்த உள்ளனர். விமல் வீரவன்சவிடம் எழுப்பிய கேள்விகளில் நான்கில் ஒரு பகுதிக்கே நேற்றைய தினம் பதிலளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை
Dec 28, 2016 @ 10:28
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய விமல் வீரவன்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மோசடி சம்பவம் ஒன்று தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.