- பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவிப்பு…
- பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி திங்கட்கிழமை திறப்பு…
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மீண்டும் நிறுவனமயப்படுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது இந்த பயங்கரவாத இயக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடர்ச்சியாகவும் பலமாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படுவது மே மாதம் 06 திகதி வரை பிற்போடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பரீட்சைகள் நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய நிலைமையில் மே தின ஊர்வலங்களை நடத்த வேண்டாம் என்றும் இதன்போது தேசிய பாதுகாப்பு சபை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டது.
அரச நிறுவனங்கலுக்கும் முன்னணி சுற்றுலாத்துறை ஹோட்டல்களுக்கும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கும் விரிவான பாதுகாப்பை வழங்குவதற்கு புதிய பாதுகாப்பு திட்டமொன்றுக்கு தேசிய பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.
#president #srilanka #National Security council #eastersundayLK