இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறை மா அதிபரிடம் விசாரணை


காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின்போது காவல்துறை மா அதிபரிடம் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

#eastersundayLK # pujithjayasundara #InspectorGeneralofPolice

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.