இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்2 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் கேரளாவில் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் அவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள் சிம் கார்ட்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹமட் அரபாத்( Ahamed Arafat) மற்றும் அபூபக்கர் சித்திக் ( Aboobacker Siddique) ஆகிய இருவருமே கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினமன்று நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்ததுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப் பாக இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் தப்பி இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க கடற் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு2 இளைஞர்களை கேரளாவில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் இலங்கையின் பிரதான தற்கொலைக் குண்டுதாக்குதல்தாரிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.#eastersundaylk #NIAraids3Keralahouses