Home இலங்கைசிவராமின் நினைவு நாளும், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலியும்…

சிவராமின் நினைவு நாளும், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலியும்…

by admin


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி டி. சிவராமின் 14ம் ஆண்டு நினைவு நாளும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நடைபெற்றது.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொது சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து , நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் , ஊடக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More