குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் அனுமதி பெறாது இறைச்சியாக்கி அவற்றை சுகாதார சீர்கேடான முறையில் எடுத்து சென்ற இருவரையும் பிணையில் விடுவித்த நீதிவான் இறைச்சியை அழிக்க உத்தரவிட்டார்.
யாழ்.நாவாந்துறை பகுதியில் சுகாதார பிரிவின் அனுமதி பெறப்படாமல் மாடு கொல்லப்பட்டு இறைச்சியாக்கிய பின்னர் அவற்றை சுகாதார சீர்கேடான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்படுவதாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலை யாழ்.காவல்துறையினருக்கு அறிவித்து முச்சக்கர வண்டியை காவல்துறையினர்; வீதியில் வழிமறித்து , அதில் இருந்த இருவரை கைது செய்ததுடன் , அதிலிருந்த 40 கிலோ இறைச்சியையும் கைப்பற்றினார்கள். அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் சுகாதார பரிசோதகர் வாக்கு மூலம் பெற்ற பின்னர் காவல்துறையினர் ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
குறித்த வழக்கினை விசாரித்த நீதிவான் 40 கிலோ இறைச்சியையும் அழிக்குமாறும் , சந்தேக நபர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
#meat #distroyed #jaffna