இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்த பானி புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒடிசாவின் பூரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தமையினால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கடுமையான மழை பெய்திருந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தநிலையில் பானி புயல் பங்களாதேசின்; சிட்டகாங் பகுதியை நோக்கி சென்று இன்று சனிக்கிழமை வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
#odisa #fanicyclone #rain