Home இலங்கைமன்னார் சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு

மன்னார் சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் காவல்துறை பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நேற்று (3) இரவு பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது

சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்ற மன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் குறித்த இரு பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு காவல்துறையினருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர்.மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (3) இரவு குறித்த வெடி பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#mannar #explosive #army #police

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More