நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் காவல்துறையினருடன் இராணுவத்தினர் மற்றும் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில், அட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
நாளை (06.05.2019 ) பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இச்சோதனை மேற்கொண்டதாகவும் இதனால் மக்கள் எவ்வித அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
#upcountry #schools #checking