Home இலங்கை பசறை ஜூம்மா பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில், வெடிபொருட்கள் – பிட்டகோட்டேயில் துப்பாக்கி ரவைகள்…

பசறை ஜூம்மா பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில், வெடிபொருட்கள் – பிட்டகோட்டேயில் துப்பாக்கி ரவைகள்…

by admin

File Photos
பசறை ஜூம்மா பள்ளிவாசலுக்குப் பின்புறத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..

பசறை ஜூம்மா பள்ளிவாசலுக்குப் பின்புறத்திலிருந்து டெட்னேடர்கள் உட்பட வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியிலிருந்து ஜெலிக்னைட்கள், டெடனேடர்கள், 20 அடி நீளமான நூல், 250 கிலோகிராம் அமோனியா, இரண்டு அடி நீளமான வயர் ஆகியன  மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காவற்துறையினரருக்கு அலைபேசி வழியாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, காவற்துறைக் குழுவினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது, குறித்த வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்லவில்193 துப்பாக்கி ரவைகள் மீட்பு

பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில், இரண்டு மாடி வீடொன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ரவைகளும் அருள் 89 ரக ஆர்.ஜி.பி ரவையொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், குறித்த ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை மீட்கப்பட்டதாகப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். #Ammunition #explosive #eastetsundayattacklk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More