Home இலங்கைவடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பித்தது. எனினும் மாணவர்களின் வரவு முழுமையாகவில்லை என்று பாடசாலைகளின் சமூகங்களால் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிப்பதது பிற்போடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றையதினம் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இராணுவம், பொலிஸார் இணைந்து சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு சோதனைகளுக்கு மத்தியிலும் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற முதல் நாளில் மாணவர்களின் வருகை என்பது பாடசாலைகளில் வீழ்ச்சியாகவே காணப்பட்டது.

#schools #reopen #eastersundaylk

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More