140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் காவல்துறையினரினால் நேற்றைய தினம் ( திங்கள்) கடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் வேளை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் ஏ9 பிரதான வீதியிலும், டிப்போ கனகபுரம் வீதியிலும் உள்ள வியாபார நிலையங்கள் கடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் போது சந்தேகத்திற்கு இடமான எவையும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#kilinochchi #checking #army #police #businessplace
Spread the love