அயோத்தி விவகாரத்தில் இணக்கமான தீர்வு காண்பதற்கு சமரச குழுவுக்கு ஓகஸ்ட் 15ம் திகதிவரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்கு உரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பில் 2010-ம் ஆண்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 14 பேர் உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன் வைத்த உச்சநீதிமன்றம் மூவர் கொண்ட சமரச குழுவை அமைத்து இ 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
இது குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் சில மொழி பெயர்ப்புகள் தவறாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனையடுத்து சமரச குழுவுக்கு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதிவரை அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#Ayodhya #solution # reconciliationgroup #time