Home உலகம் இஸ்ரேலின் எல்லையில் கழுகுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளன

இஸ்ரேலின் எல்லையில் கழுகுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளன

by admin


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் எட்டு கழுகுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி எனவும் தெரிவித்துள்ளனர்.

கிரிபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், நேற்று வெள்ளிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. மேலும் டு உயிருக்கு போராடி கொண்டிருந்த மேலும் இரண்டு கழுகுகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விசம் கொடுத்து எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்தும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் இந்தவகைக் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

#Eagles #isrel #poison

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More