கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்க உள்ளள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை ஆளுனர் பதவியிருந்து நீக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பான யோசனையை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று இராஜகிரியவில் நடைபெற்ற இலங்கை தேசிய மகா சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
#RishadBathiudeen # AthuraliyeRathnaThero #noconfidenceMotion #AssadSally #ALAMHizbullah