Home இலங்கைமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 4 கிராமங்களில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 4 கிராமங்களில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட 04 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சன்னார்,வெள்ளாங்குளம்,வேட்டையாமுறிப்பு,பரப்புக்கடந்தான் ஆகிய ஆகிய 4 கிராமங்களிலும் 84 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ,  மாந்தை மேற்குபிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Mannar #Manthai #HousingScheme #Foundation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More