Home இலங்கைகடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்கள் கூட்டணியின் அழைப்பாளர் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் மோசடிகள், குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமெனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றச்  செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More