Home இலங்கைமஹிந்த விசர் கதை பேசுகின்றார் – டிலான் பெரேரா:-

மஹிந்த விசர் கதை பேசுகின்றார் – டிலான் பெரேரா:-

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசர் கதை பேசுகின்றார் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை பசறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த வெளியிட்ட கருத்து விசர்த்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2020ம் ஆண்டு வரையில் தேர்தல் நடைபெறாது எனவும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளினால் 2017ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையை வேண்டுமானால் மாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More