239
(யாழ்.விசேட நிருபர்)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன் போது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் அகவணக்கம் இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து மாணவர்கள, ஊழியர்கள் மலர்வணக்கம் செலுத்தி சுடர்களை ஏற்றினர். மேலும் இவ்விடத்தில் தமிழர்களுக்கான நீதி வேண்டும் என்று குறிப்பிட்ட பதாகை ஒன்றும் நினைவேந்தல் தூபியில் வைக்கப்பட்டிருந்தது. #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல் #மலர்வணக்கம்
Spread the love