152
இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ; வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
#surenragavan #eastersundaylk
Spread the love