இந்தோனேசியாவில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைநகரில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வதந்திகள் பரவுவதை தடுக்க சில பகுதிகளில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த போராட்டங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கலகங்களைக் தூண்டியதாக குறைந்தது 20 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தோல்வி அடைந்த வேட்பாளர் பிரபோவோ சுபியன்டோ, இந்த தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#இந்தோனேசியா #போராட்டம் #கலவரம் #indonesia #protest