திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய சக்திகளாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் முடிவடைந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்தி உள்ளன. இரு கட்சிகளும் ஏறத்தாழ தலா 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆளுக்கு 15 லட்சம், 16 லட்சம் என வாக்குகளைப் பெற்றுள்ளமையானது மிகப் பெரிய சாதனையாக நோக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியை இனவாத, தமிழ் தேசியவாத கட்சியாக மட்டுமே பலரும் பார்த்து வந்த நிலையில் தாம் உறுதியாகவே களத்தில் இருப்பதாக சீமானும், நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமானவர்கள் என மக்களும் இந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.
இதேவேளை புதிதாக பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைத்து விடப் போகிறது என்ற அலட்சியம் திமுக அதிமுக கட்சிகளிடையே இருந்த நிலையில் கொள்கையை உறுதியாக வைத்து தொடர்ந்து முன்னேறி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் முறையாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேவேளை மக்கள் நீதி மய்யம் ஏறத்தாள 16 லட்சம் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை, வட சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சம் வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
# திமுக #அதிமுக #நாம் தமிழர் கட்சி #மக்கள் நீதி மய்யம்