145
சிலாபம் – திகன்வௌ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான இளைஞர் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Spread the love