குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
களவாடப்பட்ட அரச சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடிய புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விசேட திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்களை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடமிருந்து அந்தச் சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரச நிறுவனங்களை பாதுகாக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விமர்சனம் செய்து வரும் நபர்களே கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர் புதிய சட்டத்தின் ஊடாக குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன் களவாடப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட மூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.