148
எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இவ் விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி மக்களுக்கு உதவி வழங்குவது குறித்து பிரதமருடனான சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#மகிந்த ராஜபக்ஸ #ரணில் விக்ரமசிங்க #சந்திப்பு
Spread the love