திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தின் 71ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு , கலாமன்ற சனசமூக நிலையமும் , கலாமன்ற விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்தில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் சனமூக நிலைய தலைவர் இ. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சனமூக நிலையத்தின் போசகர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக ந. ஆறுமுகதாஸ் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக, முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் இ.பசுபதீஸ்வரன் , நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் க.மயூரன் மற்றும் J/ 114 கிராம சேவையாளர் ம.வசந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலாமன்ற விளையாட்டு கழகத்திற்கும் , BBK partnership அணிக்கும் இடையில் காட்சி போட்டி நடைபெற்றது. அதில் BBK partnership அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இறுதிப்போட்டி ஆரம்பமானது. இறுதிப்போட்டியானது 7 வீரர்கள் – ஆறு பந்து பரிமாற்ற போட்டியாக நடைபெற்றது. அதில் பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டுக்கழகமும் கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகமும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றனர். துவாரகன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதனை அடுத்து 59 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் 55 ஓட்டங்களையே பெற்றனர்.
மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று, வெற்றி கேடயத்தை பெற்றுக்கொண்டதுடன் , 20 ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர். இரண்டாம் இடத்தை பெற்ற இளங்கதிர் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்திற்கான கேடயத்தினை பெற்றுக்கொண்டது 10ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர்.
#மென்பந்து கிரிக்கெட் #பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழக அணி #வெற்றி