Home பிரதான செய்திகள்சம்பியன்ஸ் லீக் தொடரில் லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

சம்பியன்ஸ் லீக் தொடரில் லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

by admin

ஐரோப்பிய முதற்தரக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை வென்று லிவர்பூல் கழகம் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த லிவர்பூல், போட்டி முடிவடைவதற்கு மூன்று நிமிடமிருக்கையில் மற்றுமொரு கோலை போட்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது

இந்தப் போட்டியில் போட்டியில் வென்றதன் மூலம் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான தொடரில் ஆறாவது தடவையாக லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Liverpool  #Champions League #சம்பியன்ஸ் லீக்  #லிவர்பூல் கழகம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More